தன்பாத் மக்களின் பிரதான தொழிலாக சுரங்கத் தொழில் இருக்கிறது. ஜார்கண்டின் முக்கியமான வருவாயாக நிலக்கரி வருமானமே உள்ளது. 112 நிலக்கரி சுரங்கங்கள் உள்ள ஜார்கண்டில் 27.5மில்லியன் டன் பெறப்படுகிறது.
இதன் மூலம் 7000மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மின்திட்டங்களும் அதிக அளவில் இங்கு நிறுவப்பட்டுள்ளன. நீர்மின்சாரத்திற்கு மைதான் மற்றும் பஞ்சத் பொறுப்பில் உள்ளதுபோல, எரிமின்சாரத்திற்கு டாடா மற்றும் தாமோதர் பொறுப்பில் உள்ளன.
இங்குள்ள சுரங்கவேலைகள் BCCl பொறுப்பில் உள்ளன. சக்தி மற்றும் எஃகு தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி வழங்கிய முதல் நிறுவனமாக CCL திகழ்கிறது.
தன்பாதில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ள ஜாரியா நிலக்கரி தேக்கமாக திகழ்கிறது. இங்குள்ள இந்திய சுரங்கப் படிப்புப் பள்ளி சுரங்கம், மண்ணியல், பெட்ரோலியம், தாது தொடர்பான படிப்புகளைச் சொல்லித் தருகிறது.