தர்மஸ்தாலா வரும் பயணிகள் நேரம் இருந்தால் அன்னப்ப பெட்டா குன்றுக்கும் செல்லலாம். இது படினேத பெட்டா என்றும் அழைக்கப் படுகிறது. இங்கு தரம் கடவுளை முதன்மை தெய்வமாக கொண்ட நான்கு கோயில்கள் உள்ளன. ஆனால் அதன் உள்ளே சிலைகள் ஒன்றையும் மக்கள் காணமுடியாது. முக்கியமாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கோயிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது.
ஒரு காலத்தில் இந்தக் குன்றில் வசித்து வந்த ஜைன குடும்பம் ஒன்றின் சமூக சேவையை பார்த்து மகிழ்ந்து போன நான்கு தர்ம தேவதைகளும், அன்னப்ப பெட்டா குன்றுக்கு வருகை புரிந்ததாக கூறப்படுகிறது.