திண்டுக்கல் மலை திண்டுக்கல்லின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். திண்டுக்கல்லின் பெயர் இம்மலையில் இருந்தே பெறப்பட்டது. அதாவது ‘திண்டு’ என்றால் தலையணை என்று அர்த்தம், ‘கல்’ என்றால் மலை என்று அர்த்தம்.
இந்த மலையானது இந்நகரத்தை துருத்தி கொண்டு தலையணை போன்ற வடிவத்தில் காணப்படுவதால் இந்த பெயர் வந்தது. இந்த மலைகளின் உச்சியில் திண்டுக்கல் கோட்டையானது அமைந்துள்ளது.
இந்த மலை உச்சியில் இருந்து திண்டுக்கல் நகரை பரிபூரணமாக பார்த்து ரசிக்க முடியும். மேலும் இந்த மலை உச்சியில் உள்ள சுத்தமான காற்று உங்கள் சோர்ந்த ஆன்மாவிற்கு ஒரு புத்துனர்வை தரும்.