Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » த்ராஸ் » வானிலை

த்ராஸ் வானிலை

த்ராஸ் செல்ல விரும்பும் பயணிகள் ஜூன் முதல் செப்டம்பர் வரை நிலவும் கோடை காலத்தில் பயணப்படுவதே சிறந்ததாகும். அதீத குளிரின் காரணமாக கண்டிப்பாக குளிர்கால பயணங்களைத் தவிர்க்கவேண்டும்.

கோடைகாலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை): ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கும் கோடை காலம் செப்டம்பர் வரை நீள்கிறது. அதிகபட்சமாக 24டிகிரியும் குறைந்தபட்சமாக 9டிகிரி வரையும் தட்பவெட்ப நிலை பதிவு செய்யப்படுகிறது. கோடைகால  தட்பவெட்ப நிலையில் மிதமாக உள்ளதால் இப்பகுதியை சுற்றிப் பார்க்க அதுவே சிறந்த பருவமாக கருதப்படுகிறது.

மழைக்காலம்

(டிசம்பரில் இருந்து மே வரை): த்ராஸ் பகுதியில் அதிகப்படியான மழை பதிவுசெய்யப்படுவதில்லை என்றாலும் வருடாந்திர மழைப்பதிவு டிசம்பர் முதல் மே மாதம் வரையிலேயே நிகழ்கிறது. 320மிமீயில் இருந்து 14மிமீ வரை பனி படர்வதாக கணக்கிடப்படுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் மத்தியில் இருந்து மே மத்தி வரை): அக்டோபரின் மத்தியில் இருந்து மே மத்தி வரை இங்கு குளிர்காலம் நீடிக்கிறது. செர்பியாவுக்கு அடுத்ததாக, அதாவது உலகிலேயே மக்கள் வசிக்கும் குளிர் அதிகமான 2வது குளிர்பிரதேசமாக த்ராஸ் அறியப்படுவதால் இங்கு -22டிகிரியில் இருந்து -45டிகிரி வரை குளிர் நிலவுகிறது.  இந்த பருவத்தில் நிலவும் அதீத குளிரின் காரணமாக த்ராஸ் பகுதிக்கு குளிர்காலத்தில் வருவது உகந்ததல்ல.