Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துத்வா » வானிலை

துத்வா வானிலை

துத்வா பூங்காவிற்கு சென்று வர தகுந்த காலம் நவம்பர் முதல் மார் வரை ஆகும். ஏனெனில் இந்த மாதங்களில் இந்தியாவில் உள்ள பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணாக்கர்கள் இந்த பகுதியில் இருக்கும் காடுகள், புல்வெளிகள் மற்றும் விலங்குகள் பறவைகளை பார்த்து ரசிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் வருவர். ஆகவே இந்த காலத்தில் துத்வா சென்று வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

கோடைகாலம்

மார்ச் முதல் மே மாதம் வரை துத்வாவில் கோடைகாலம் நிலவுகிறது. கோடையில் இந்த பகுதியில் 22 முதல் 40 டிகிர செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். குறிப்பாக மே மாதத்தில் இங்கு வெப்பம் அதிகமாக காணப்படும்.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை துத்வாவில் மழைக்காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் துத்வாவில் அதிகமான மழை அளவு பதிவாகும். வானம் எப்போதும் மேக மூட்டத்தோடு காணப்படும். வானிலையும் ஈரப்பதத்தோடும் வெப்பச் சலனத்தோடும் இருக்கும்.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்த பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. குளிர்காலத்தில் இந்தப் பகுதியின் வெப்பநிலை மிகவும் இதமாக இருக்கும். அப்போது இந்த பகுதியில் 12 முதல் 20 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும்.