Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிழக்கு கரோ ஹில்ஸ் » வானிலை

கிழக்கு கரோ ஹில்ஸ் வானிலை

குளிர்காலமே கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள உகந்தாக உள்ளது. இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கேற்ற அதிகக்குளிர் இல்லாத இனிமையான சூழல் இக்காலத்தில் நிலவுகிறது. மலையேற்றம் போன்ற சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுதற்கும் குளிர்காலமே பொருத்தமாக உள்ளது.

கோடைகாலம்

மேகாலயா மாநிலத்தின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டம் கோடைக்காலத்தில் அதிகம் வெப்பத்துடன் காட்சியளிக்கிறது.  இக்காலத்தில் அதிகபட்சமாக 37°C வரை வெப்பநிலை உயரக்கூடும். ஒட்டுமொத்த கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டமும் ஒரு பீடபூமி அமைப்பில் இடம்பெற்றிருப்பதால் அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பம் மிகுந்த அசௌகரியத்தை தரக்கூடும். ஏப்ரல் முதல் ஜுன் வரை இப்பகுதியில் கோடைக்காலம் நிலவுகிறது.

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக்காலத்தில் கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டம் கடுமையான மழைப்பொழிவை பெறுகிறது. மேலும், இம்மாவட்டத்தின் சில பகுதிகளுக்கான போக்குவரத்து வசதிகளும்கூட பாதிப்படைகின்றன. எனவே இக்காலம் சுற்றுலாவுக்கு ஏற்றதல்ல.  

குளிர்காலம்

அக்டோபர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் சராசரி வெப்பநிலையாக  7°C  முதல் 25°C  வரை நிலவுகிறது. அதிக குளிர் இல்லாத இதமான சூழலை குளிர்காலம் கொண்டுள்ளதால் இந்த கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் சுற்றுலா அம்சங்களை ரசிப்பதற்கேற்ற பருவமாக இது  விளங்குகிறது.