பைசாபாத் ஒரு வரலாற்று நகரம் ஆகும். இதன் கடந்த கால வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு பைசாபாத் அருங்காட்சியகம் நமக்கு உதவுகிறது. இங்குள்ள பல அரிய தொல்பொருள்கள் மற்றும் அழகிய கலைப் பொருட்கள் முகலாய காலத்திய சமூக மற்றும் கலாச்சாரத்தை காட்சிப்படுத்துகின்றன.
இங்குள்ள சில காட்சிப் பொருட்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. காட்சி பொருட்களில் சில அரிய வெள்ளி, ஆடை, ஆயுதங்கள், பாத்திரங்கள் மற்றும் பழங்கால கலைப்பொருட்கள் ஆகியன முக்கிய இடம் வகிக்கின்றன.
இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள போர் ஆயுதங்கள், இந்நகர மன்னர்களின் இலகுவான பக்கங்களை முன்னிலைப்படுத்ததுகின்றன. இந்த அருங்காட்சியகம் நன்கு பராமரிக்கப்பட்டு வருவதால் இதை ஆழ்ந்து அனுபவித்து சுற்றி பார்க்கலாம்.