Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபரித்கோட் » வானிலை

ஃபரித்கோட் வானிலை

ஃபரித்கோட்டில் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இனிமையான வானிலை நிலவுகின்றது. ஆகவே சுற்றுலா பயணிகள் இந்தப் பருவத்தில் இனிமையான வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட்டு மகிழலாம். எனவே இந்தப் பருவமே ஃபரித்கோட் சுற்றுலாவிற்கு மிகவும் உகந்த பருவம் ஆகும். 

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை ): ஃபரித்கோட்டில் கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கின்றது. இங்கு கோடை காலத்தில் மிகவும் சூடான மற்றும் உலர்ந்த வானிலையே நிலவுகின்றது. கோடைகாலத்தில் ஃபரித்கோட்டில்  அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 41 மற்றும் 26.5 டிகிரி செல்ஸியஸ் ஆகும். இங்கு சில நேரங்களில் வெப்பநிலை 47 டிகிரி செல்ஸியஸ் வரை சென்று விடுகின்றது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): இங்கு பருவமழை ஜூன் இறுதியில் அல்லது ஜூலை ஆரம்பத்தில் துவங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கின்றது. வெப்பமான கோடை நாட்களில் இருந்து ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாக இந்த மழைக் காலம் ஃபரித்கோட்டை ஆசீர்வதிக்கின்றது. இங்கு மழைக் காலத்தில் வெப்பநிலை சிறிது குறைந்து காணப்படுகின்றது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை ): இங்கு அக்டோபர் மாத இறுதியில் வெப்பநிலை வேகமாக குறைந்து குளிர்காலம் பிறக்கின்றது. குளிர்காலத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 20 மற்றும் 4.5 டிகிரி செல்ஸியஸ் ஆகும்.