Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ஃபதேபூர் சிக்ரி

ஃபதேபூர் சிக்ரி - வரலாற்று சுற்றுப்பயணம்!

30

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களுள் ஒன்றான ஃபதேபூர் சிக்ரி, 16ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அக்பரால் 1571ல் இருந்து 1583க்குள் நிர்மாணிக்கப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் இருக்கும் ஃபதேபூர் சிக்ரி இன்றளவும் முகலாய அரசின் கலாச்சாரங்களையும், நாகரீகத்தையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது. ஷேக் சலீம் க்றிஸ்டி என்பவர், அக்பருக்கு மகன் பிறக்கபோவதை இவ்வூரில் கணித்தார். இந்நகரின் வடிவமைப்பு இந்திய நகர அமைப்பை மையமாக வைத்தும், ஷாஜஹனாபாத் என்றழைக்கப்பட்ட பழைய டில்லியை வைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பின்னணி

1585-ல், ஆப்கானிய பழங்குடியினருடன் போரிடும் பொருட்டு அக்பர் இந்நகரில் இருந்து வெளியேறினார். அதன் பின் முகாலய தர்பார் ஒரே ஒருமுறை, 1619ல் ஜஹாங்கீர் ஆக்ராவில் ஏற்பட்ட நோய் தாக்குதலுக்கு அஞ்சி இங்கு பதுங்கியிருந்த போது மூன்று மாதங்களுக்கு நடைபெற்றது.

பின் மறுபடியும் ஒருமுறை காலி செய்யப்பட்ட ஊர், மீண்டும் 1892ல் கண்டுபிடிக்கப்பட்டது. 14வருடங்கள் செயல்பாட்டில் இருந்தபோது மிகுந்த சக்திவாய்ந்த இடமாக விளங்கிய ஃபதேபூர் சிக்ரியில் பல பொது இடங்களும், மசூதிகளும் இருந்தன.

மேலும் ராணுவ வீரர்கள், பணியாட்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களின் வாழ்விடமாக விளங்கினாலும் அதைப் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்படவில்லை.

மிகச்சில பகுதிகளே தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் தோண்டு எடுக்கப்பட்டதில் பெரும்பாலான இடங்கள் நன்றாக பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.

கரடுமுரடான மேடு பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்து அருகில் ஒரு பிரத்யேகமான செயற்கை ஏரியும் அமைக்கப்பட்டிருக்கிறது.  மூன்று திசைகளிலும் ஆறடி சுவர்களால் சூழப்பட்டுள்ள இவ்வூர் சுற்றிலும் காவல் கோபுரங்களாலும், அரண் போன்ற வாயிற்கதவுகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஆக்ரா வாயில் பெரிய பாதிப்புக்குட்படாமல் பாதுகாப்பான நிலையில் உள்ளது.

ஃபதேபூர் சிக்ரியின் அருகில் அமைந்துள்ள சுற்றுலா தங்கள்

இங்கு காணப்படும் நினைவுச்சின்னங்கள் இந்து, பாரசீக மற்றும் இந்தோ-இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் அமைந்த திவான்-இ-அம் என்றழைக்கப்பட்ட அக்பரின் தர்பார் இங்கு அமைந்துள்ளது.

தெளலத் கானா என்னும் அரண்மனையை மறைக்கும் வண்ணம் இவ்விடம் அமைக்கப்பட்டுள்ளது. புத்த கோவில்களை நினைவுபடுத்தும் நான்கு மாடிகள் கொண்ட ராஞ்ச் மகால், ஜோதா பாயின் உறைவிடம், துருக்கிய சுல்தானா என்றழைக்கப்படும் அனுப் தலாவ் ஓய்வரங்கு, மற்றும் பீர்பால் அரண்மனை ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன.     

ஃபதேபூர் சிக்ரி பிரம்மாண்ட மசூதி, மெக்காவிற்கு இணையாக கருதப்படும் ஜம்மா மஸ்ஜித் போன்ற பல மத தளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மசூதியில் தான் பின்னாட்களில் ஜஹாங்கீரால் மெருகேற்றப்பட்ட புகழ்பெற்ற ஷேக் அலிம் கல்லறை அமைந்துள்ளது.

1572ன் குஜராத் வெற்றிகளைக் குறிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட புலாந்த் தர்வாஜா இங்கு அமைந்துள்ளது. மேலும் இபாபத் கானா, அனுப் தலாவ், ஹுஜ்ரா-இ-அனுபு தலாவ் மற்றும் மரியம் உஜ் ஜமானி அரண்மனை ஆகியவையும் இங்கு உள்ளது.

இன்று ஃபதேபூர் சிக்ரி அழிந்துவிட்ட பழைய நகரமாக அறியப்பட்டாலும் அதன் பாரம்பரிய சின்னங்களில் பல அழியாமல் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே காணக்கிடைக்கின்றன. நகரத்தை சுற்றிப்பார்க்கும் போது அக்காலத்திய பிரம்மாண்டத்தை நம்மால் உணர முடிகிறது.

ஃபதேபூர் சிக்ரிக்கு பயணப்படும் முறைகள்

ஃபதேபூர் சிக்ரியை அடைய ரயில் மற்றும் சாலை வசதிகள் நிறைய உண்டு. ஆக்ரா விமானநிலையமே அருகாமையில் உள்ள விமான நிலையம் ஆகும்.

பயணப்பட சிறந்த பருவம்

நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் ஃபதேபூர் சிக்ரிக்கு பயணப்பட சிறந்த பருவமாக அறியப்படுகிறது.

ஃபதேபூர் சிக்ரி சிறப்பு

ஃபதேபூர் சிக்ரி வானிலை

சிறந்த காலநிலை ஃபதேபூர் சிக்ரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஃபதேபூர் சிக்ரி

  • சாலை வழியாக
    ஆக்ராவுடன் தரைவழி போக்குவரத்து கொண்ட ஃபதேபூர் சிக்ரியில் இருந்து ஆக்ரா மற்றும் டெல்லிக்கு பேருந்து வசதிகள் உண்டு.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    அருகில் உள்ள ஆக்ரா கண்ட் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கு ரயில் வசதி உண்டு.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஃபதேபூர் சிக்ரிக்கு அருகில் அமைந்துள்ள விமான்நிலையம் 40கிமீ தொலைவில் உள்ள ஆக்ராவின் கேரியா விமான நிலையம் ஆகும். இங்கிருந்து தனியார் கார்களின் மூலம் இலக்கை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed