ட்சோங்க்மோ அல்லது சாங்கு ஏரி என்றழைக்கப்படும் இந்த ஏரி கிழக்கு சிக்கிம் பிரதேசத்தில் காங்க்டாக் நகரத்திற்கு 40 கி.மீ முன்னதாக அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3780 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த அழகிய ஏரி பனிமலை நீரால் நிரம்பி காட்சியளிக்கிறது.
சிக்கிம் பிரதேசத்தில் நாது லா பாஸ் எல்லைப்பாதைக்கு செல்லும் வழியில் இந்த ஏரியை பார்க்கலாம். இங்கிருந்து சீன எல்லைப்பகுதி 5 கி.மீ தூரத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெருமைப்படுத்தும் வகையில் ஒரு விசேஷ தபால் தலையையும் இந்திய அஞ்சல் துறை 2006ம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறது.