Share This Story
 

பீட்டல் பீச், கோவா

பரிந்துரைக்கப்பட்டது

தெற்கு கோவா பகுதிகளிலுள்ள மற்ற கடற்கரைகளை போல பீட்டல் பீச்சும் அமைதியான கடற்கரைதான். இந்தக் கடற்கரையிலிருந்து கோல்வா பீச் நடந்து செல்லும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது.

கோவா புகைப்படங்கள் - பீட்டல் பீச் - எங்கும் நீலமயம்
Image source:www.goa-tourism.com

அதோடு இதன் சுற்றுப் பகுதிகளில் லீலா, தாஜ், ஹாலிடே இன் போன்ற 5 நட்சத்திர ஹோட்டல்கள் இருப்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும், இந்தக் கடற்கரையில் நீங்கள் சுவையான கோவாவின் கடல் உணவை ருசி பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் மீனவர்கள் தங்களுடைய படகுகளில் மீன்பிடிக்கும் காட்சியையும் அவ்வப்போது காண முடியும்.

பீட்டல் பீச்சில் நீங்கள் சில அற்புதமான நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். அதோடு பீட்டல் பீச் மிகவும் சுத்தமாக இருப்பதால் கடல் நீரில் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீந்தித் திளைக்கலாம். இதுதவிர பீட்டல் பீச்சில் கிடைக்கும் கோவான் உணவு வகைகள் பயணிகளிடையே வேகுப்பிரசித்தம்.

கோல்வா பீச்சுக்கு அருகில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் கார் ஓட்டுனர்களுக்கு நன்கு பழக்கப்பட்டவைகள் என்பதால் அந்த இடத்துக்கு உங்களை விரைவாக கொண்டு சென்று விட்டுவிடுவார்கள்.

அதன் பிறகு பீட்டல் பீச்சுக்கு நீங்கள் நடந்தே சென்று விடலாம். இது தவிர நீங்கள் வாடகை கார்கள் அல்லது ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டும் பீட்டல் பீச்சுக்கு செல்லலாம். மேலும், மஜோர்டா மற்றும் மார்கோ ரயில் நிலையங்கள் பீட்டல் பீச்சுக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கின்றன.

Click here to type in tamil
பீட்டல் பீச் புகைப்படங்கள்