Share This Story
 

ஹாஃப் மூன் பீச், கோகர்ணா

பரிந்துரைக்கப்பட்டது

கோகர்ணா பகுதியில் உள்ள அவ்வளவாக பிரசித்தமடையாத இந்தக் கடற்கரை பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய ஒன்றாகும். ஓம் பீச்சிலிருந்து நடந்தோ அல்லது படகிலோ இந்த கடற்கரைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஓம் பீச் மற்றும் ஹாஃப் மூன் பீச் இரண்டும் இடையில் ஒரு மலைக்குன்றினால் பிரிக்கப்பட்டுள்ளது.

கோகர்ணா புகைப்படங்கள் - ஹாஃப் மூன் கடற்கரை - கரையோர பனைமரங்கள்
Courtsey : Prem Shikhare

இந்த குன்றின் மீதிருந்து பார்த்தால் அரபிக்கடலின் அற்புதக்காட்சி கண் முன் விரிகிறது. பாரம்பரிய இந்திய பாணி குடில்கள் அழகாய் இக்கடற்கரையில் காணப்படுகின்றன. இங்கு நீர்விளையாட்டு அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும், பெயிண்ட்பால், வாலிபால், மிதவைப்படகுகள், கூண்டறைகள், துடுப்புபடகுகள், கூடாரவாசம் மற்றும் நீச்சல் போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் பயணிகளுக்காகவே காத்திருக்கின்றன.

இது தவிர பகலில் வெயில் காய்தல் மற்றும் இரவில் தொங்கு ஊஞ்சலில் ஓய்வெடுத்தல் போன்ற சுவாரசியமான அனுபவங்களை பயணிகள் பெறலாம்.

Click here to type in tamil
ஹாஃப் மூன் பீச் புகைப்படங்கள்