Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோமுக் » வானிலை

கோமுக் வானிலை

கோமுக்கிக்கில் ஆண்டு முழுவதும் குளிராக இருக்கும். ஆனால் கோடை காலத்தில் சற்று மிதமான வெப்பநிலை இருக்கும். எனவே கோடை காலத்தில் கோமுக்கிற்கு சுற்றுலா வருவதே சிறந்தது.

கோடைகாலம்

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோமுக்கில் கோடை காலமாகும். அப்போது இங்கு அதிகபட்சமாக 15 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். கோடை காலத்திலும் இந்த பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும்.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கும் மழைக் காலமாகும். இந்தக் காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று மூலம் இந்தப் பகுதியில் அதிகமான அளவு மழை இருக்கும். அதனால் நிலச்சரிவும் இந்த பகுதியில் அதிகமாக இருக்கும்.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை கோமுக்கில் கடுமையான குளிர் நிலவும். அதாவது இந்த காலத்தில் அதிகபட்சமாக 10 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 0 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை இருக்கும்.