இமாம்பரா என்பது கோரக்பூரில் உள்ள ஒரு பழைய 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தர்கா ஆகும். இந்த தர்கா ரோஷன் அலி ஷா என்கிற பிரபலமான மற்றும் மிகவும் போற்றப்பட்ட முஸ்லீம் துறவிக்காக கட்டப்பட்டது.
இங்கு உள்ள தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன தாஜியா மிகவும் புகழ் பெற்றது. இந்த தர்காவில் அணையாத நெருப்பு ஒன்று உள்ளது. பல பக்தர்கள் தங்களுடைய பிரார்தனையை செலுத்த அடிக்கடி தர்காவிற்கு வருகை புரிகின்றனர்.