குவஹாத்தி பிளானட்டேரியம் குவஹாத்தி நகரத்தின் மையப்பகுதியில் எம்.ஜி ரோடு எனப்படும் பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது. இது இந்தியாவிலுள்ள நவீனமான வானோக்கு கூடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
வித்தியாசமான அரைக்கோள வடிவமைப்பு மற்றும் சரிவான சுவர்களுடன் காட்சியளிக்கும் இந்த பிளானட்டேரியம் நாட்டிலுள்ள மற்றைய வானியல் மையங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு காட்சியளிக்கிறது.
விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை கொண்டிருக்கும் மாணவர்களும் பொது மக்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர். ஜப்பானிய கோட்டோ ஜி.எக்ஸ் எனும் நவீன வானியல் தொலைநோக்கி இந்த மையத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது.
விண்வெளி குறித்த ஒரு புதிய புரிதலை இந்த மையத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் பார்வையாளர்கள் பெறலாம். தினமும் நூற்றுக்கணக்கில் உள்ளூர் மக்களும் வெளியூர் பயணிகளும் இந்த மையத்திற்கு வருகை தருகின்றனர்.
வானியல் ஆராய்ச்சி குறித்த அறிவியல் கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் வளாகமாகவும் இந்த குவஹாத்தி பிளானட்டேரியம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. நாடெங்கிலிருந்தும் அறிவியலாளர்கள் இவற்றில் கலந்து கொள்ள வருகை தருகின்றனர்.