ஸோனாபுர், ஹஜிபுரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாத முழு நிலவு நாளில், கார்த்திக் திவாஸ் என்கிற ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது.
இது ஆண்டுதோறும் நடைபெறும் சந்தை ஆகும். இந்த சந்தையானது சுமார் பதினைந்து நாட்களுக்கு நடைபெறுகின்றது. மேலும் இந்த சந்தை கால்நடை வியாபாரத்திற்காக நடைபெறும் ஒரு முக்கியச் சந்தை ஆகும். ஸோனாபுர் சந்தையானது மிகவும் பிரபலமான மற்றும் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை சந்தைகளில் ஒன்றாகும்.
இந்தச் சந்தையின் பொழ்து கால்நடை வியாபாரங்களைத் தவிர்த்து நாட்டுப்புற நாடகங்கள், நாட்டுப்புற நடனங்கள், இசை, தெரு நாடகங்கள் மற்றும் பார்வையாளர்கள் கவரும் சர்க்கஸ் போன்ற துடிப்பான நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது.
இந்தச் சந்தையில் ஆடைகள் போன்ற உள்நாட்டு பொருட்களுடன் மர தளபாடங்கள் கூட வாங்க முடியும். மாநில சுற்றுலா துறை இந்த சந்தையை நிர்வகிக்கின்றது மேலும் இந்தச் சந்தையின் பொழுது பார்வையாளர்களுக்கு தங்கும் வசதிகளும் கிடைக்கின்றன.