ஹஜ்ரத் மக்டும் அலாவுதீன் அலி அஹமத் ஷபிர் அவர்களின் வழிபாட்டுத்தளமாக பிரண் கலியெர் விளங்குகிறது. ஹரித்வாரில் இருந்து 23கிமீ தொலைவில் இருக்கும் இவ்விடம் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கு முக்கியமான மதஸ்தலமாக விளங்குகிறது.
இஸ்லாமிய காலண்டரின் முக்கிய மாதமான ரபி' அல்-அவ்வால் விழாவின் போது ஏராளமான பக்தர்கள் இங்கு குவிகிறார்கள். மேலும் இஸ்லாமியர்களின் 'உர்ஸ்' திருவிழா இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.