ஹரிஹரேஷ்வர் ஸ்தலத்தின் மிக முக்கியமான புராதனமான கோயில் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே பிரசித்தமான இந்த காலபைரவர் கோயில் ஆகும். புகழ்பெற்ற ஆன்மிக யாத்திரை ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோயில் சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பல விக்கிரகங்களில் காலபைரவர் சிலை முக்கியமானதாக கருதப்படுகிறது. காலபைரவர் மந்திரசாஸ்திரங்களின் கடவுளாக வணங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
புராண ஐதீகங்களின்படி சிவபெருமான் இந்த காலபைரவரை படைத்து அவருக்கு எல்லா மந்திர வலிமைகளையும் அருளியதாக சொல்லப்படுகிறது.
இந்த கோயிலின் சிற்பக்கட்டிடக்கலை வடிவமைப்பு அற்புதமாக காணப்படுகிறது. இதன் அருகாமையிலேயே தக்க்ஷிண் காசி என்றழைக்கப்படும் யோகேஸ்வரி கோயிலும் அமைந்துள்ளது.
மஹா சிவராத்திரி போன்ற பண்டிகை தினங்களில் இந்த கோயில்களில் வரிசையில் அணிவகுத்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். ஹரிஹரேஷ்வர் கடற்கரையை பின்னணியில் கொண்டிருப்பதால் இந்த கோயில் அமைந்திருக்கும் சூழல் எழிலுடன் காட்சியளிக்கின்றது.