ஹன்சி நகரத்திற்கு கிழக்கில் 26கிமீ தொலைவில் உள்ள பார்சி நுழைவாயில் நகரத்தின் ஐந்து பிரதான நுழைவாயில்களில் ஒன்றாகும். டெல்லி நுழைவாயில், ஹிசார் நுழைவாயில், கோசைன் நுழைவாயில் மற்றும் உம்ரா நுழைவாயில் ஆகியவை மற்ற நான்கு.
பார்சி வாயிலுக்கு வெளியே எப்போதும் கூட்டமாக இருக்கும் சந்தை ஒன்று அமைந்துள்ளது. ஹன்சி கோட்டையின் பிரதான நுழைவாயிலாக பார்சி நுழைவாயில் விளங்கியது. இவ்வாயிலில் உள்ள பெர்சிய பதிப்பு ஒன்று இதன் கட்டுமானம் 1304ல் இருந்து 1305வரை இருக்கலாம் எனக் கூறுகிறது.
இவ்வாயில் கில்ஹான என்ற ராஜபுத்திர வீரரால் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சிலர் இவ்வாயில் 1167ஆம் ஆண்டு கட்டப்பட்டது எனக் கூறுகிறார்கள்.
பலமுறை சேதப்படுத்தப்பட்ட இவ்வாயில் முதல்முறையாக 1799ல் ஜார்ஜ் தாமாஸ் என்வரால் சரி செய்யப்பட்டது. மராட்டியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான போரில் 1801ல் இவ்வாயில் சேதப்படுத்தப்பட்டது. பின் கடைசியாக 2001 மீண்டும் சரிசெய்யப்பட்டது.