ஹிசாரில் உள்ள இம்மாளிகை 1354ல் ஃபெரோஸ் ஷா துக்ளக் என்பரால் கட்டப்பட்டது. பழைய ஹிசார் நகரம் கோட்டைக்குள்ளேயே டெல்லி வாயில், மோரி வாயில், நெளகாரி வாயில், தலாகி வாயில் என சுற்றிலும் மதில் சுவர்களுடன் கூடிய நான்கு வாயில்களால் மூடப்பட்டிருந்தது.
மணல் கற்களால் ஆன 20அடி தூண்களால் கட்டப்பட்டுள்ள லட் கி மஸ்ஜித் என்ற மசூதி கோட்டையின் உள்ளேயே அமைந்துள்ளது. பூமிக்கடையில் கட்டிடங்களும், திவா- ஈ- ஆம் என்ற வளாகமும் உள்ளது.
ஃபெரோஸ் கானால் தன் மனைவி குஜிர் என்பவருக்காக கட்டப்பட்ட குஜ்ரி மஹால் என்ற மற்றொரு மாளிகை இதன் அருகிலேயே அமைந்துள்ளது.
மன்னர் தன் மனைவி குஜ்ரியை தன்னுடன் டெல்லி வருமாறு அழைத்தபோது அவர் மறுத்ததாகவும், அதன் பொருட்டு தன் மனைவிக்கு இங்கேயே ஒரு இல்லத்தை அவர் அமைத்துக்கொடுத்ததாகவும் நம்பப்படுகிறது.
1356ல் குஜ்ரி மஹாலின் கட்டுமானப்பணி முடிந்தது. செவ்வக வடிவத்தில் பிரம்மாண்டமாக நிற்கும் இவ்வளாகத்தை பாதுகாக்கப்பட்ட புராணச் சின்னமாக இந்திய தொல்பொருள்துறை அறிவித்துள்ளது.