ஹோசாங்காபாத்தின் புகழ் பெற்ற பார்வையிடங்களில் ஒன்றாக ராம்ஜி பாபா சமாதி உள்ளது. இந்த சமாதியில் ராம்ஜி பாபா என்பவர் வழிபடப்பட்டு வருகிறார். இந்த சமாதியில் ராம்ஜி பாபாவிற்காக உள்ளூர் மக்களால் நடத்தப்படும் திருவிழா சுமார் ஒரு மாதம் வரையிலும் நீடிக்கும்.
இந்த சமாதிக்கு பெருமளவிலான பார்வையாளர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வருவது வழக்கம். ஹோசாங்காபத் மக்களிடையே ஆன்மீகத்தை பாதுகாத்து வைத்திருக்கும் இடமாக ராம்ஜி பாபா சமாதி உள்ளது.
இந்த சமாதிக்கு பெருந்திரளாக வரும் ராம்ஜியின் பக்தர்களை காணும் போது ராம்ஜி பாபாவிற்கு இம்மாநிலம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெருமளவிலான பக்தர்கள் உள்ளது நன்றாக விளங்கும்.
எனவே தான், மத முக்கியத்துவம் வாய்ந்த இந்த ராம்ஜி பாபா சமாதி ஹோசாங்காபத் நகரத்தின் அழகை மெருகேற்றும் இடமாக உள்ளது. ஹோசாங்காபாத் சுற்றுலாவில் ராம்ஜி பாபா வருடாந்திர திருவிழா மிகவும் முக்கியமான அம்சமாக உள்ளது.