Share This Story
 

ஐமேக்ஸ், ஹைதராபாத்

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

ஐமேக்ஸ் எனப்படும் விசேஷ திரைப்பட தொழில்நுட்ப வசதி மற்றும் பிரம்மாண்ட காட்சித்திரைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ‘பிரசாத் ஐமேக்ஸ்’ திரையரங்கு தென்னிந்திந்தியாவில் முதல் முதலாக அமைக்கப்பட்ட ஐமேக்ஸ் திரையரங்காகும். 72 அடி உயரமும் 92 அடி அகலமும் கொண்ட காட்சித்திரை இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் புகைப்படங்கள் - ஐமேக்ஸ்
Image source:www.wikipedia.org

இந்திய திரைப்படத்துறையில் மிக நீண்ட பாரம்பரியத்தை பெற்றுள்ள ‘எல்.வி. பிரசாத்’ குடும்ப நிறுவனத்துக்கு சொந்தமான இந்த அதிபிரம்மாண்ட திரையரங்க வளாகம் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரசித்தமாக அறியப்படும் ஒன்றாகும்.

உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் இந்த திரையரங்க வளாகத்திற்கு விரும்பி விஜயம் செய்கின்றனர். பிரம்மாண்ட திரையில் ஆறு சானல் ஒலி வசதிகளோடு இந்த திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் பிரமிக்க வைக்கக்கூடிய, மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைய தலைமுறையினரை சொக்க வைக்கக்கூடிய பொழுதுபோக்கு அனுபவம் இந்த திரையங்கில் காத்திருக்கிறது என்பதும் உண்மை.

இந்த வளாகத்தில் வசதியான நவீன உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பலதரப்பட்ட உணவுவகைகளும் சிற்றுண்டிகளும் கிடைக்கின்றன. மில்க்ஷேக்ஸ் மற்றும் சுவையான ஐஸ்கிரீம் போன்றவை இங்கு இளைய தலைமுறையினரின் விருப்பத்திற்கேற்ப அதிகம் கிடைக்கின்றன.

சர்வதேச பிராண்டுகளை விற்பனை செய்யும் அங்காடிப்பிரிவும் இந்த திரையங்க வளாகத்திலேயே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்கேரி ஹவுஸ்’ எனப்படும் திகில் பொழுதுபோக்கு கூடமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மனதைரியம் உள்ளவர்கள் இங்கு விஜயம் செய்யலாம். இப்படி பலதரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய ஐமேக்ஸ் திரையங்கம் நவீன உல்லாச பொழுதுபோக்கு அம்சங்களில் விருப்பமுள்ளவர்களுக்கு மிகவும் பொருத்தமான இடமாக ஹைதராபாத் நகரில் காத்திருக்கிறது.

Click here to type in tamil
ஐமேக்ஸ் புகைப்படங்கள்