இடுக்கியிலிருந்து 12 கி.மீ தூரத்தில் இந்த பல்குளமேடு எனப்படும் சிகரப்பகுதி அமைந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து 3125மீட்டர் உயரத்தை கொண்டுள்ள இந்த சிகரம் தனது எழில் நிறைந்த மலைகள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளுக்காக புகழ் பெற்று விளங்குகிறது.
வருடத்தின் எந்த நாளிலும் இந்த சிகரப்பகுதிக்கு விஜயம் செய்து மகிழலாம். நடைபயணம் அல்லது மலையேற்றம் போன்ற பொழுதுபோக்குகளுக்கு இது உகந்த ஸ்தலமாக அமைந்துள்ளது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இயற்கை ரசிகர்களுக்கும் இந்த பல்குளமேடு சிகரம் மிகவும் பிடித்த இடமாக இருக்கும்.