Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இடுக்கி » வானிலை

இடுக்கி வானிலை

இனிமையான பருவநிலையை கொண்டுள்ளதால் இடுக்கி சுற்றுலாத்தலத்திற்கு வருடத்தின் எந்த நாளிலும் பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் மழைக்காலத்தை தவிர்ப்பது நல்லது. கோடைக்காலத்தில் விஜயம் செய்வது மிகவும் விசேஷம். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான இடைப்பட்ட பருவம் இடுக்கி இயற்கைச் சுற்றுலா பிரதேசத்துக்கு விஜயம் செய்வதற்கு உகந்ததாகவும் உள்ளது. இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும் போது குளிருக்கான ஆடைகளை கொண்டு செல்வது உத்தமம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): இடுக்கி பகுதியில் கோடைக்காலம் மிகக்குறுகலாக மூன்று மாதங்கள் மட்டுமே காணப்படுகிறது. மார்ச் முதல் மே வரை இங்கு கோடைக்காலம் நிலவுகிறது. இனிமையான சூழல் நிலவும் இக்காலத்தில் அதிகபட்சமாக 32° C வரை மட்டுமே வெப்பநிலை காணப்படுகிறது. எனவே சுற்றுலா மேற்கொள்ள இது உகந்த காலமாகவும் உள்ளது.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் பாதி வரை): இடுக்கி பகுதியில் ஜுன் மாதத்தில் துவங்கும் மழைப்பொழிவு செப்டம்பர் வரை நீடிக்கிறது. வெப்பநிலை குறைந்து இப்பகுதி முழுவதும் குளுமையுடன் இக்காலத்தில் காணப்படுகிறது. இருப்பினும் வெளிச்சுற்றுலாவுக்கு இக்காலம் உகந்ததல்ல. மழைக்காலத்தில் இடுக்கிக்கு விஜயம் செய்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): இடுக்கி பகுதியில் குளிர்காலமானது மிக நீண்ட ஒன்றாக காணப்படுகிறது. மிகக் குறைந்த வெப்பநிலையாக 10° C வரை இக்காலத்தில் காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 22° C யாக உள்ளது. அக்டோபரிலிருந்து ஆரம்பிக்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இடுக்கிக்கு குளிர்காலத்தில் பயணம் மேற்கொண்டால் மறக்காமல் கனமான வெப்பமான ஆடைகளை கொண்டு செல்வது நல்லது.