புனிதமான கல் என்று பொருள் படும் ஐயாவ்முஸியாங் பகுதி ஜெயின்டியா மலைகளின் மிகப்பெரிய சந்தைப் பகுதிகளை கொண்டிருக்கிறது. இந்த சந்தையின் மத்தியில் இருக்கும் புனிதமான கல்லினாலேயே இந்த இடத்திற்கு இப்பெயர் கிடைத்துள்ளது.
உள்ளூரில் கொண்டாடப்படும் பாஹ்டீன்க்லாம் திருவிழாவின் போது, மக்கள் அனைவரும் இந்த கல்லினருகே ஒன்று கூடி வழிபடுவது வழக்கம்.
இந்நகரைச் சுற்றிலும் ஓடிக் கொண்டிருக்கும் சிறு சிறு சுனைகளை தாண்டிச் செல்வதற்காக காசி மற்றும் ஜெயின்டியா மக்கள் உருவாக்கியுள்ள மூங்கில் தக்கைகளால் உருவாக்கப்பட்ட பாலங்கள் இந்த இடத்தின் அழகை கூட்டியுள்ளன.
ஜெயின்டியா பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஷாப்பிங் செய்ய மிகவும் ஏற்ற பகுதிகளில் ஒன்றாக ஐயாவ்முஷியாங் உள்ளது. பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள், மூங்கில் தக்கை பாய்கள், மழையில் நனைந்தாலும் நைந்து போகாத இருக்கைகள் ஆகியவை இங்கே கிடைக்கும் சிறந்த பொருட்களாகும். மீன்கள் பிடிப்பதற்காக மூங்கில் குச்சிளால் இங்கே அழகுற செய்யப்படும் பொருட்களும் பிரபலமான விலை பொருட்களாகும். இது வாழ்கையை வசியப்படுத்தும் நகரமாகும்.
ஷில்லாங் மற்றும் ஜோவாய் ஆகிய இடங்களிலிருந்து சுற்றுலா வாகனங்கள் அல்லது பேருந்து மூலம் இந்நகரை எளிதில் அடையலாம்.