ஜெய்ப்பூர் நகர வளர்ச்சித்துறையினரால் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பூங்கா இந்த சென்ட்ரல் பார்க் ஆகும். நகர மையத்தில் அமைந்துள்ள இந்த தோட்டப்பூங்காவில் ராம்பாக் போலோ மைதானமும் போலோ கிளப்பும் இடம்பெற்றுள்ளது.
5 கி.மீ நீளமுள்ள நடைப்பாதை மற்றும் ஓட்டப்பயிற்சிப்பாதை இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் உள்நாட்டுப் பறவைகளும் புலம்பெயர் பறவைகளும் இந்தப்பூங்காவுக்கு வருகை தருவதால் பறவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது.