தமிழின் வயது எவ்வளவு தெரியுமா? இதை படிங்க
தேடு
 
தேடு
 

நஹார்கர் கோட்டை, ஜெய்ப்பூர்

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

நாகர்கர் கோட்டை ஜெய்ப்பூர் மஹாராஜா சவாய் ஜெய் சிங் அவர்களால் கட்டப்பட்டுள்ளது. 1734ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோட்டையின் உயர்ந்த சுவர்கள் மற்றும் காவல் கோபுரங்கள் 1880ம் ஆண்டில் மஹாராஜா சவாய் மதோ சிங் அவர்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் புகைப்படங்கள் - நஹார்கர் கோட்டை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

ஆரவல்லி மலைத்தொடர்களை ஒட்டி அமைந்துள்ள இந்த கோட்டையானது இந்திய மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை அம்சங்களின் கலவையாக காட்சியளிக்கிறது. இது ஜெய்பூர் இளவரசரான நஹார் சிங்’கின் பெயரால் அழைக்கப்படுகிறது.

அவரது ஆவி இந்த கோட்டையின் கட்டுமானத்திற்கு பலவகைகளில் இடைஞ்சலை ஏற்படுத்தியதாகவும், கோட்டை வளாகத்தில் அவருக்கு ஒரு கோயிலை கட்டுவித்த பின்னரே அது சமாதானமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

நஹார்கர் எனும் சொல்லுக்கு புலிகளின் வசிப்பிடம் என்பது பொருளாகும். இக்கோட்டையில் மன்னர்கள் மற்றும் ராஜகுடும்பத்தினர் கோடைக்காலத்தில் ஓய்வெடுப்பதற்கு பயன்படுத்திய மாதவேந்திர பவன் எனும் மாளிகையும் உள்ளது.

தற்சமயம் இந்த கோட்டைப்பகுதி பிரபலமான சிற்றுலாத்தலமாக திகழ்கிறது. ஒரு தேநீரகம் மற்றும் உணவகம் போன்றவையும் இந்த கோட்டை வளாகத்தில் பயணிகள் வசதிக்காக அமைந்துள்ளன.

Please Wait while comments are loading...

மற்றவை ஜெய்ப்பூர் ஈர்க்கும் இடங்கள்