உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி, ஜலந்தர்

பரிந்துரைக்கப்பட்டது

புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி எனும் அறிவியல் மையம் ஜலந்தர் கபுர்தலா சாலையில் 72 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ளது. இது குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கு மிகவும் ஏற்ற சுற்றுலா அம்சமாகும்.

ஜலந்தர் புகைப்படங்கள் - புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி - செயற்கை நீரூற்று
Image source:en.wikipedia.org
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

இங்கு பல்வேறு அறிவியல் காட்சிவிளக்க அமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இயற்பியல், உயிரியல், சமூக அறிவியல், தொழில் நுட்பவியல், விவசாயம், மனித பரிணாமம், அணு அறிவியல், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பத்துறை, உயிரியல் தொழில் நுட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளில் இங்கு காட்சி விளக்க அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

லேசர் காட்சிகள் மற்றும் விமானப்பயண உணர்வை அளிக்கும் ‘சிமுலேஷன்’ இயந்திரங்கள் போன்றவையும் இங்கு பார்வையாளர்களை உற்சாகமூட்டும் அம்சங்களாக அமைந்திருக்கின்றன.

இந்த மையத்திற்கு வெளியே உணவகங்களும் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளும்கூட தங்கள் மாணவர்களை விசேஷ கல்விச்சிற்றுலாவுக்காக இந்த மையத்துக்கு கூட்டமாக அழைத்து வருகின்றன

. எல்லா வயதினருக்கும் ஏற்ற பயனுள்ள பொழுதுபோக்கு அம்சமாக ஜலந்தர் நகரத்தில் உள்ள இந்த புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி அமைந்திருக்கிறது.

Please Wait while comments are loading...