ஒண்டர்லேண்ட் தீம் பார்க் எனப்படும் இந்த் பொழுதுபோக்கு பூங்கா தோவாபா எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. முக்கியமான சுற்றுலா அம்சமாக அறியப்படும் இந்த பூங்கா நாட்டிலுள்ள மிகச்சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றாகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
இங்கு எல்லா வயதினரும் உற்சாமாக பொழுது போக்கும் வகையில் பல்வேறு இயந்திர சவாரி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பர் கார் மற்றும் ஃப்ளையிங் ஜெட் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஹாரர் ஹவுஸ் எனும் கூடத்தில் பயமுறுத்தும் பேய் உருவங்களும் ஆவி உய்ரினங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இங்குள்ள நீர் விளையாட்டு பூங்காவில் பே சைட், வேவ் பூல், வொண்டர் ஃபால், இன்டோர் அக்வா டான்ஸ், ஜையண்ட் & ஸ்பீட் ஸ்லைட் போன்ற விளையாட்டு அமைப்புகள் உள்ளன. பசுமையான புல்வெளி மற்றும் பரிசுப்பொருள் கடை போன்றவையும் இந்த பூங்காவின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகும்.