உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

அமர் மஹால், ஜம்மு

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

டோக்ரா அரசரான ராஜா அமர் மூலம் 1890 ல் கட்டப்பட்டது அமர் மஹால், ஜம்முவின் பிரதம சிறப்புகளில் ஒன்று. இதன் கட்டிட அமைப்பு ஒரு பிரஞ்சு கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்டது.

ஜம்மு புகைப்படங்கள் - அமர் மஹால் 
Image source:Wikipedia
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

இதன் காரணமாக இந்திய கைவினைஞர்களால் கட்டப்பட்ட இந்த மஹால் பிரஞ்சு நாட்டுபுற கட்டிட கலை பாணியை ஒத்திருக்கிறது. அமர் மஹால் கட்டுவதற்கு செம்மண் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

கடந்த காலத்தில், அமர் மஹால் ராயல் குடும்ப உறுப்பினர்கள் குடியிருப்பாக இருந்து வந்துள்ளது. எனினும் இந்த இடமானது பின்னர் ஒரு அருங்காட்சியமாக மாற்றப்பட்டு புத்தகங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், மற்றும் கல்வெட்டுகள் சேகரிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

இந்த அருங்காட்சியகத்தில் பிரதான ஈர்ப்பு 'பஹாரி' ஓவியங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆட்சியாளர்களின் ஓவியங்களை கொண்டு அலங்கரிக்கப்பெற்ற இது ‘தர்பார் ஹால்’ உள்ளது. 120 கிலோ தங்கத்தினால் செய்யப்பட்ட மகாராஜா ஹரி சிங்கின் அரியணையை இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே காணலாம்.

சுற்றுலா பயணிகள் அமர் மஹால் அருங்காட்சியகம் உள்ளே அமைந்துள்ள 20,000 புத்தகங்கள் இருப்பு கொண்ட ஒரு நூலகத்தை பார்க்க முடியும். சில சிறப்பு தொகுதிகளை கொண்ட இந்த புத்தகங்கள், ராஜா அமர் சிங் நூலகத்தில் இருந்து கடந்த 50 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்டவை.

Please Wait while comments are loading...