பாக் ஈ பஹு மீன் பண்ணை, சமீபத்தில் பஹூ கோட்டையை சுற்றியுள்ள பாக் ஈ பஹூ வில் புதிதாக சேர்க்கப்பட்டது. 220 மீட்டர் நீளம் கொண்ட, இந்த புதிதாக சேர்க்கப்பட்ட மீன் பண்ணை இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நிலத்தடி மீன் பண்ணையாக அமைந்துள்ளது.
மீன் வடிவிலான இந்த மீன் பண்ணை 24 மீன் குகைகளையும், கடல் மீன்களை கொண்டுள்ள மற்ற மீன் பண்ணைகளை தவிர்த்து 13 சிறிய நன்னீர் மீன்கள் நிறைந்த மீன் பண்ணை குகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
400 வகையான மீன் இனங்களை கொண்டுள்ளது இந்த மீன் பண்ணை. மீன் களை மட்டும் பார்த்து கொண்டுடிருப்பதை தவிர, சுற்றுலா பயணிகள் அருங்காட்சியகம், மல்டிமீடியா சென்டர், பொது ஜன காலரி, மற்றும் இங்கு நிறுவப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்களின் விழிப்புணர்வு மையம் போன்றவற்றை பார்வையிடலாம்.