ராஜ்புரி நீர்வீழ்ச்சி, தன்புரி நீர்வீழ்ச்சி, ராணி தஹ் நீர்வீழ்ச்சி, பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி, தமேரா நீர்வீழ்ச்சி, குல்லு நீர்வீழ்ச்சி, சுரி நீர்வீழ்ச்சி, பனே நீர்வீழ்ச்சி போன்ற அழகிய நீர்வீழ்ச்சிகள் ஜஷ்பூர் பகுதியில் அமைந்திருக்கின்றன.
இவற்றில் பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி மாவட்டத்தலைநகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இது ஒரு முக்கியமான பிக்னி ஸ்தலமாகும். ராஜ்புரி நீர்வீழ்ச்சி மற்ற எல்லா நீர்வீழ்ச்சிகளையும்விட பிரசித்தமாக அறியப்படுகிறது.
இவை தவிர ராணி தஹ் நீர்வீழ்ச்சி மற்றும் தன்புரி நீர்வீழ்ச்சி ஆகிய இரண்டும் பசுமையான காட்டுப்பகுதியின் நடுவே ரம்மியமான இயற்கைக்காட்சிகளின் நடுவே வீற்றிருக்கின்றன.
பனே நீர்வீழ்ச்சி குன்குரி எனும் இடத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதுவும் அவசியம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சியாகும். குல்லு மற்றும் சுரி நீர்வீழ்ச்சிகளும் இதனை ஒட்டியே அமைந்திருக்கின்றன.
இந்த எல்லா நீர்வீழ்ச்சிகளுமே செழிப்பான தாவர வளம் மற்றும் காட்டுயிர் வளம் நிரம்பிய வனப்பகுதிகளால் சூழப்பட்டிருப்பது ஒரு முக்கியமான சிறப்பம்சமாகும்.