நீனிஜி கோயில் என்றும் அழைக்கப்படுகிற இந்த ராஸிக் பிஹாரி கோயில் உதய் மந்திர் சாலையில் அமைந்துள்ளது. ராஸிக் பிஹார் எனும் தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் கிருஷ்ணர் ராதை சிலைகளும் காணப்படுகின்றன.
மேலும், கோயில் கூடத்திலுள்ள கதவுகளில் கிருஷ்ணர், கருடா மற்றும் ஹனுமான் போன்ற உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கர்ப்பகிருகத்தை சுற்றியுள்ள மாடம் வெண் கல்லினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கோயில் இந்திய தொல்லியல் துறையின் நேரடி பராமரிப்பில் உள்ளது.