உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

ஜோக் நீர்வீழ்ச்சி - இயற்கையின் பெருமிதப் படைப்பு

கம்பீரமும், பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற  இயற்கையின் பெருமிதப் படைப்பாய் விளங்குகிறது ஜோக் நீர்வீழ்ச்சி. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.

ஜோக் நீர்வீழ்ச்சி - புராதானமான இயற்கை படைப்பு
Image source: Wikipedia
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

ஜோக் நீர்வீழ்ச்சி  தங்கு தடையின்றி  பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும்  இங்கு வருவர்.

அதோடு அருவியை சுற்றிக் பச்சை பட்டாடை உடுத்தியது போல் அமைந்திருக்கும் மரங்களும், செடிகொடிகளும் நீர்வீழ்ச்சியின் அழகை மேலும் மேருகேற்றக் கூடியவை. ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை பயணிகள் ரசிப்பதற்கு என்றே நிறைய அனுகூலமான பகுதிகள் இருக்கின்றன.

அதில் மிகவும் முக்கியமானது வேட்கின்ஸ் தளம். ஜோக் நீர்வீழ்ச்சியை சுற்றி இருக்கும் ஸ்வர்ண நதியும், ஷராவதி பள்ளத்தாக்கும் பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

Please Wait while comments are loading...