Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கபினி » வானிலை

கபினி வானிலை

நவம்பர் மற்றும் ஜுன் மாதத்திற்கு இடைப்பட்ட  காலம் கபினி வனப்பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாக கருதப்படுகிறது. இக்காலத்தில் மழைக்காலத்திற்கு பிந்தைய பசுமையுடனும் எழிலுடனும் வனப்பகுதி அற்புதமாக காட்சியளிக்கின்றது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே மாதம் வரை): கபினி பகுதியில் கோடைக்காலம் உஷ்ணம் சற்று அதிகமாகவே இருக்கும். பகல் பொழுதில் வெப்பநிலை 36° C ஆகவும் இரவில்   10° C ஆகக் குறைந்தும் காணப்படும். இதனால் இரவு நேரத்தில் சூழல் குளுமையுடனும் இனிமையுடனும் காணப்படும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை): கபினி பிரதேசம் மழைக்காலத்தில் கடுமையான மழைப்பொழிவை பெறுகிறது. வெளியில் சென்று சுற்றிப்பார்ப்பது சிரமம் என்பதால் மழைக்காலத்தில் பயணிகள் கபினி பகுதிக்கு செல்வதை தவிர்க்கின்றனர்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை): குளிர்காலத்தின் போது கபினி பிரதேசத்தில் பருவநிலை குளுமையாகவும் இனிமையாகவும் உள்ளது. குளிர்காலத்தில் வெப்பநிலை 6° C முதல் 26° C வரை காணப்படும். இருப்பினும் குளிர்காலத்தில் விலங்குகளை அதிகம் வெளியில் பார்க்கமுடியாது என்பதால் பயணிகள் இக்காலத்தில் கபினிக்கு விஜயம் செய்வதை தவிர்க்கின்றனர்.