Search
  • Follow NativePlanet
Share

கபிர்தாம் - இயற்கை மற்றும் தொல்பொருளியல் ஆர்வலர்களுக்கு!

30

கபிர்தாம் முந்தைய காலத்தில் கவர்தா மாவட்டம் என அழைக்கப்பட்டது. இது துர்க் , ராஜ்நந்த்காவ் , ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையே அமைந்துள்ளது . கபிர்தாம் சுமார் 4447. 5 சதுர கி.மீ அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. கபிர்தாம் ஒரு அழகான மற்றும் அமைதியான இடத்தில் அமைந்துள்ளதால் இயற்கை ஆர்வலர்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியைச் சுற்றி அழகிய காடுகள், மலைகள், மற்றும்  மத சிற்பங்கள் உள்ளன.

கபிர்தாமின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் சத்புராவின் மைக்கல் என்கிற மலைத்தொடரால் சூழப்பட்டிருக்கிறது. அது ஸகரி ஆற்றின்  தெற்கு கரையில் அமைந்துள்ளது.

இது இந்த இடத்தின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கிறது . இந்த இடத்தில் உள்ள மலைகள் மற்றும் காடுகள் காண்பர்களின் மனதை பெரிதும் மயக்குகின்றது. இந்த இடத்தில் உள்ள பரந்த பசுமை காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றது.

இடத்தின் பெயர் கபீர் சாஹிப் வருகையிலிருந்து உருவானது. மேலும் அவரது சீடர் தர்மதாஸ் என்பவரும் இந்த கபிர்தாமிற்கு வருகை புரிந்துள்ளார். இந்த கபிர்தாம் 1806 முதல் 1903 வரை கபீர் பந்த்தின் குரு காடி பீடமாக விளங்கியது.

கவ்ரதா மஹாபலி சிங் என்பவரால் 1751-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த இடத்தின்  பெயர் கபிர்தாம் என 2003-ம் ஆண்டில் மாற்றப்பட்டது . கபிர்தாம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சுதேச பிலாஸ்பூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது .

அகாரிய என்கிற மொழி இங்கு பெருன்பான்மையான மக்களால் குறிப்பாக இந்த மைக்கல் ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் மக்களால் பேசப்படுகின்றது.

கபிர்தாமில் ஹஃப் மற்றும் ப்ஹொக் என்கிற இரண்டு ஆறுகள் பாய்கின்றன. இங்குள்ள  மைக்கல் மலைத்தொடரில் உள்ள கெஸ்மர்டா சிகரமே மிக உயரமான சிகரமாக கருதப்ப்டுகின்றது. கபிர்தாமில் விமான ஓடுதளம் ஒன்று நிறுவப்பட இருக்கின்றது.

கபிர்தாம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

கபிர்தாமின் ப்ஹொரம்டியோ கோயில் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்தக் கோவிலின் நேர்த்தியான கட்டமைப்பு கஜுராஹோவின் கட்டிட அமைப்பை ஒத்திருக்கிறது . எனவே இது "சத்தீஸ்கர் கஜுராஹோ" என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோவில் மாவட்ட  தலைநகரில் இருந்து சுமார்  18 கி.மீ.  தொலைவில் உள்ளது. வரலாறு மற்றும் தொல்லியல் துறை ஆய்வுகள் இந்தக் கோவிலின் முக்கியத்துவத்தை நிரூபிக்கின்றன.

கபிர்தாம் பல்வேறு மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. நக்வன்ஸ்ஹி அரசர்கள் 9-14 ஆம் நூற்றாண்டின் போது இந்த இடத்தில் தங்களுடைய ஆட்சியை நடத்தி வந்துள்ளனர்.

அதன் பின்னர் இந்த இடம் ஹைஹய்வன்ஸ்ஹி அரசர்களின் கைகளுக்கு மாறியது.  இந்த ஆட்சியாளர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புராதன கோட்டைகளின் எச்சங்கள் இங்கே இன்னமும் இருக்கின்றன.

செளரா மற்றும் ச்ஹ்ஹப்ரி ஆகிய இரண்டும் கபிர்தாமின் மற்றுமொரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். மேலும் கபிர்தாமில் மட்வா மஹால் என்கிற மற்றொரு நேர்த்தியான வரலாற்று நினைவுச்சின்னம் உள்ளது.

இது ப்ஹொரம்டியோ கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த சிறப்பு மிக்க இடத்தில் தான நக்வன்ஸ்ஹி  அரசருக்கும் ஹைஹவன்ஸ்ஹி அரசிக்கும் திருமணம் நடைபெற்றது.

மட்வா என்கிற உள்ளூர் சொல்லிற்கு திருமணப் பந்தல் என அர்த்தம். இது ஒரு சிவன் கோவிலாக இருந்த போதிலும், அதன் பந்தல் வடிவம் காரணமாக இது மட்வா மஹால் எனப் பெயர் பெற்றது.

இந்தக் கோவிலுக்கு டுல்ல்ஹடெயோ என்கிற மற்றொரு பெயர் உள்ளது.  இது 25-வது  ஃபானிநக்வன்ஸ்ஹ்  அரசரான ராம்சந்திரா தேவ்  என்பரால்  கி.பி 1349 ம் ஆண்டு கட்டப்பட்டது.

கபிர்தாமில் ச்ஹெர்கி மஹால் , பச்ஹ்ராஹி மற்றும் ஜெயின் புதா மகாதேவ் போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பிற இடங்களும் உள்ளன.

கபிர்தாமை பார்க்க சிறந்த பருவம்

இங்கு ஆண்டு முழுவதும் மிதமான காலநிலை நிலவுகின்றது.

கபிர்தாமை எவ்வாறு அடைவது ?

கபிர்தாம் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

கபிர்தாம் சிறப்பு

கபிர்தாம் வானிலை

சிறந்த காலநிலை கபிர்தாம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கபிர்தாம்

  • சாலை வழியாக
    கபிர்தாமில் இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல பேருந்துகள் எளிதாக கிடைக்கின்றன. கபிர்தாமில் இருந்து ராய்ப்பூர் சுமார் 117 கி.மீ தொலைவிலும், ராஜ்நந்த்காவ் சுமார் 143 கி.மீ. தொலைவிலும், மற்றும் ஜபல்பூர் சுமார் 242 கி.மீ தொலைவிலும் உள்ளது. கவர்டாஹவில் இருந்து தனியார் டாக்சிக்களை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் ப்ஹொரம்டியோ கோயிலுக்கு செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கபிர்தாமுக்கு அருகில் ராய்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் மும்பை மற்றும் ஹவுரா போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கபிர்தாமில் இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல பேருந்துகள் எளிதாக கிடைக்கின்றன. கபிர்தாமில் இருந்து ராய்ப்பூர் சுமார் 116 கி.மீ தொலைவிலும், ராஜ்நந்த்காவ் சுமார் 133 கி.மீ. தொலைவிலும், மற்றும் ஜபல்பூர் சுமார் 220 கி.மீ தொலைவிலும் உள்ளது .கவர்டாஹவில் இருந்து தனியார் டாக்சிக்களை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் ப்ஹொரம்டியோ கோயிலுக்கு செல்லலா
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed