சைன்பூர் என்ற பெரிய கிராமாத்தில் திருவிழா கால கொண்டாட்டங்கள் கோலாகலப்படும். காளி பூஜை, ஹோலி மற்றும் துர்க்கை பூஜைகள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
இது போக ஜென்மாஷ்டமி, சிவராத்திரி, ஹனுமான் ஜெயந்தி, சாம சகேவா, சாத், சௌர்சனாரே போன்ற திருவிழாக்களும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
இந்த கிராமத்தில் சில குறிப்படத்தக்க வழிபாட்டு தலங்களும் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் நீல்கந்த் மந்திரை சொல்லலாம். இது சிவபெருமானுக்காக கட்டப்பட்ட பழமையான கோவிலாகும்.
இதன் கட்டடக்கலையின் தனித்துவத்துக்காக இக்கோவில் புகழ் பெற்று விளங்குகிறது. இது போக காளி மந்திர், துர்கா மந்திர், விஷ்ணு மந்திர், ராத கிருஷ்ண குட்டி, பிரம்ம பாபாஸ்த்தன் போன்ற கோவில்களும் இங்கு உள்ளது. ஒவ்வொரு வருடம் காளி பூஜையின் போது இக்கிராமம் மிகப்பெரிய திருவிழாவை நடத்தி கொண்டாடும்.