Share This Story
 
முகப்பு » ஆந்திர பிரதேசம் » காளஹஸ்தி » ஈர்க்கும் இடங்கள் » ‘வெய்யிலிங்கல கோணா’ நீர்வீழ்ச்சி

‘வெய்யிலிங்கல கோணா’ நீர்வீழ்ச்சி, காளஹஸ்தி

பரிந்துரைக்கப்பட்டது

வெய்யிலிங்கல கோணா நீர்வீழ்ச்சி ஸ்ரீ காளஹஸ்தி நகரத்திற்கு அருகில், நகர எல்லையிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அற்புதமான இயற்கை எழிற்காட்சிகளை கொண்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி மகிழாமல் திரும்புவதில்லை. தெலுங்கு மொழியில் இந்த நீர்வீழ்ச்சியின் பெயருக்கு” ஆயிரம் லிங்கங்கள் கொண்ட பள்ளத்தாக்கு” என்பது பொருள்.

நீர்வீழ்ச்சியை சுற்றிலும் உள்ள மலைகள் சிவலிங்கங்கள் போன்று காட்சியளிப்பதே இப்படி ஒரு பெயர் ஏற்படக்காரணமாகும். இந்த நீர்வீழ்ச்சியின் நீர் மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்பப்படுவதால் இதில் நீராடுவதற்காகவே ஏராளமான பயணிகள் விஜயம் செய்கின்றனர்.

தொடர்ந்து இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி வந்தால் சரும வியாதிகள் குணமாகும் என்று கருதப்படுகிறது. அது தவிர பாவங்களை கழுவும் தெய்வீக சக்தியும் இதற்கு உள்ளதாக ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன.

Click here to type in tamil