x
Want to share your reaction with friends?
செம்பரா சிகரம், கல்பெட்டா
பரிந்துரைக்கப்பட்டது
கல்பெட்டா நகரம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் செம்பரா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த சிகரம் சாகச பிரியர்களின் விருப்பமான பகுதியாக விளங்குவதால் இதன் உச்சியில் எண்ணற்ற டிரெக்கிங் முகாம்களை நீங்கள் பார்க்கலாம்.
Image source:commons.wikimedia.org
அதுமட்டுமல்லாமல் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலே பயணிகளுக்கு தேவையான மரக் குடில்கள், காலணிகள், டிரெக்கிங் உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது.
அதோடு அவர்களே சுற்றுலாப் பயணிகளுக்கு பயண வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள். ஆனால் நீங்கள் செம்பரா சிகரத்தில் டிரெக்கிங் செல்வதற்கு மெப்பாடி வன இலாக்கா அதிகாரியிடம் அனுமதி பெறுவது அவசியம்.
Read in English: Chembra Peak, Kalpetta
Click here to type in tamil
பிற முக்கியமான இடங்கள்



