Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் – காஞ்சி காமாட்சியின் நகரம்!

39

தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அது புராதனமான காஞ்சிபுரம் நகரம் மட்டுமேயாகும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால் மட்டுமல்ல, இது பல்லவ மன்னர்களின் தலைநகரமாகவும் இருந்த காரணத்தினாலும், பெரும் புகழ் பெற்றுள்ளது. இன்றும், சில சமயங்களில் இதன் பழைய பெயர்களான “காஞ்சியம்பதி” என்றும் “கொஞ்சிவரம்” என்றும் அழைக்கப்படுகிறது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்நகரை “ஆயிரம் கோயில்களின் நகரம்” என்றே அறிந்து வைத்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரத்திற்கு செல்வது எளிது.

இந்து மதத்தினர், தம் வாழ்நாளில் ஒரு தரமாவது சென்று வர வேண்டிய ஏழு புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்றான இந்நகரம், இந்துக்களின் புனித நகரமாகக் கருதப்படுகிறது.

இந்து மதப் புராணங்களின் படி, அவ்வேழு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவோர் கண்டிப்பாக மோட்சத்தை அடைவர் என்று நம்பப்படுகிறது. இந்நகரம், சிவ பக்தர்கள் மற்றும் விஷ்ணு பக்தர்கள் ஆகிய இருபிரிவினருக்கும் புனித ஸ்தலமாகும்.

காஞ்சிபுரம் நகரில், சிவ பெருமான் மற்றும் மஹா விஷ்ணுவிற்காக எழுப்பப்பட்ட பல கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுள் மஹா விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள வரதராஜ பெருமாள் கோயிலும், சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள ஏகாம்பரநாதர் கோயிலும் மிகப் பிரபலமானவை.

சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள, ஐம்பூதங்களைக் குறிக்கும் விதமான “பஞ்சபூத ஸ்தலங்கள்” என்னும் ஐந்து கோயில்களுள், ஏகாம்பரநாதர் கோயிலும் ஒன்று.

புனித நகரம்

ஏராளமான விஷ்ணு கோயில்கள் இங்குள்ளதாலேயே காஞ்சிபுரம், அப்பெயரில் அழைக்கப்படுவதாக சான்றோர்கள் கூறுகின்றனர். “கா” என்பது “ஆஞ்சி”-யைக் கொண்டுள்ள பிரம்மாவை குறிக்கிறது.

அதாவது இங்குள்ள விஷ்ணுவை வழிபட்ட பிரம்மா என்ற அர்த்தம் கொண்டு இதன் பெயர் வழங்கப்படுகிறது. எனினும் இங்கு சிவன் கோயில்கள் பலவும் உள்ளன. காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் அதிக பட்ச சிவன் கோயில்கள் இருப்பதால், அப்பகுதி “சிவகாஞ்சி” என்றும் விஷ்ணு கோயில்கள் அதிகம் உள்ள கிழக்குப் பகுதி, “விஷ்ணு காஞ்சி” என்றும் வழங்கப்படுகின்றது.

கைலாசநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், கச்சப்பேஷ்வரர் கோயில் மற்றும் குமரகோட்டம் ஆகியன இங்குள்ள பிரபலமான வேறு சில கோயில்களாகும்.

பழங்காலப்பெருமையின் கலவை

வரலாற்று ஆர்வலர்கள், பெருமை மிக்க கடந்தகாலத்தைக் கொண்ட காஞ்சிபுரத்தை, மிகவும் விரும்புவர். பல்லவ மன்னர்கள், மூன்றாவது நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், காஞ்சிபுரத்தை தங்கள் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.

பல்லவர்கள் பெரும் முயற்சி செய்து, நிறைய பணம் செலவழித்து இந்நகரை, தங்கள் தலைநகராக இருக்கக்கூடிய தகுதி வாய்ந்ததாக மாற்றியமைத்தனர். நல்ல சாலைகள், கட்டிடங்கள், ஆகியவற்றை நகரின் உள்ளேயும், அதனைச் சுற்றியும் நிர்மாணித்தனர்.

பல்லவர்கள், சீனர்களோடு வர்த்தகம் செய்து வந்தனர். ஏழாம் நூற்றாண்டில், இங்கு வருகை தந்த சீனப் பயணியான யுவான் சுவாங், தன் பயணக் குறிப்பில், வீரம், கல்வி, மற்றும் அன்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களாகவும், சமூக நீதி போற்றுபவர்களாகவும், காஞ்சிபுரம் மக்கள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பதினோராம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றி, பதினாலாம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்தனர். சோழர்கள் காஞ்சிபுரத்தை தங்கள் தலைநகரமாகக் கொள்ளவில்லை; எனினும், இது முக்கியமான ஒரு நகரமாகவே அப்போதும் திகழ்ந்தது.

சொல்லப்போனால், சோழ மன்னர்கள் பலவித கட்டுமானப் பணிகளை இந்நகரில் மேற்கொண்டதோடல்லாமல், அதன் கிழக்குப் பகுதியை விரிவுபடுத்தவும் செய்தனர். பதினாலாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை, விஜயநகர சாம்ராஜ்யம், காஞ்சிபுரத்தின் மீது அரசியல் செல்வாக்கு கொண்டிருந்தது.

பதினேழாம் நூற்றாண்டின் முடிவில், மராத்தியர்கள் இந்நகரை கைப்பற்றினர். ஆனால் சில காலத்திலேயே, முகலாய மன்னனான ஔரங்கசீப்பிடம் இழந்தனர். பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் இந்திய வருகை அதிகரித்த வேளையில், இந்நகரம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஆங்கிலேய ஜெனரல் ராபர்ட் கிளைவினால் ஆளப்பட்டது.

இதன் சிறப்பு வாய்ந்த கடந்த கால வரலாறு, இன்றைய நவீனயுக பயணிகளும் அறியும் வண்ணம் உள்ளது. நகரம் முழுக்கக் காணப்படும் பல்வேறு சிற்பங்கள் மற்றும் கட்டிடங்களில் வெவ்வேறு கலாச்சாரங்களின் ஆதிக்கத்தைக் காணலாம்.

இன்றைய நிலையில், காஞ்சிபுரம் அதன் ஏராளமான கோயில்கள் மற்றும் இந்திய, மேற்கத்திய ஆதிக்கங்களின் பூரண கலவையாக விளங்குவதால், பெரிதும் புகழ்பெற்று விளங்குகின்றது.

பட்டு நகரம்

காஞ்சிபுரம் பட்டு சேலைகள் உலகமெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பட்டு நூலில், தங்கச் சரிகை சேர்த்து நெய்யப்படும் இச்சேலைகள், முற்காலத்தில் வாழ்ந்த பெண்கள் மட்டுமல்லாது, இக்காலத்து நவீன பெண்களும் விரும்பும் வண்ணம் நெய்யப்படுகின்றன.

இச்சேலைகள், தென்னிந்தியாவின் உடைக் கலாச்சாரத்தில் முக்கியமான அங்கமாக இருப்பினும், தமிழர்களின் தனிப்பெருமை வாய்ந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமை பொருந்தியதாகும்.

வருடந்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இப்புனித நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், தேவராஜஸ்வாமி கோயில், மற்றும் கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

காஞ்சிபுரம், நாட்டின் பிற பகுதிகளுக்கு, சாலை வழி மற்றும் இரயில் வழி போக்குவரத்து சேவைகளினால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும். காஞ்சிபுரத்தின் வானிலை, வெப்பமான கோடைகாலமும், இரம்மியமான குளிர்காலமுமாக மாறி மாறி காணப்படும்.

காஞ்சிபுரம் சிறப்பு

காஞ்சிபுரம் வானிலை

சிறந்த காலநிலை காஞ்சிபுரம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது காஞ்சிபுரம்

  • சாலை வழியாக
    ஏராளமான பேருந்துகள் மற்றும் டாக்ஸிகள், காஞ்சிபுரத்துக்கும், காஞ்சிபுரத்திலிருந்தும், நாள்தோறும் இயக்கப்படுவதால், பெரும்பாலான மக்கள், சாலை வழியாகவே காஞ்சிபுரத்துக்குச் செல்ல விரும்புகின்றனர். சென்னையிலிருந்து, பேருந்தில் சென்றால், சுமார், ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் காஞ்சிபுரத்தை அடையலாம். டாக்ஸியில் போனால், இன்னும் விரைவாகச் செல்லலாம்; ஆனால் அதிக கட்டணம் வசூலிப்பர்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    காஞ்சிபுரம், தென்னிந்தியாவின் பிற நகரங்களுக்கு, இரயில் சேவைகளின் வலுவான கட்டமைப்பினால், நன்கு இணைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு-அரக்கோணம் தடத்தில் அமைந்துள்ள, செங்கல்பட்டு இரயில் நிலையம் உள்ளது. சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில், ஒரு பாசஞ்சர் இரயில் தினமும் இயக்கப்படுகிறது. இதில் போனால், சென்னையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் காஞ்சிபுரத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையமே, காஞ்சிபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையமாகும். தமிழகத்தின் தலைநகரான, சென்னையிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளுக்கும், விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை விமான நிலையத்திலிருந்து, சுமார் 62 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிபுரத்துக்கு, டாக்ஸி அல்லது மாநிலப் பேருந்து மூலம் சுமார் 70 நிமிடங்களில், செல்லலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 Apr,Wed
Return On
18 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
17 Apr,Wed
Check Out
18 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
17 Apr,Wed
Return On
18 Apr,Thu