Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காங்க்ரா » வானிலை

காங்க்ரா வானிலை

காங்க்ராவுக்கு சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு கோடைக்காலமே மிகவும் உகந்த பருவமாக உள்ளது. மார்ச் முதல் ஜுன் வரையான மாதங்களில் கோடைக்காலம் நிலவுகிறது. இனிமையான சூழல் நிலவும் மழைக்காலமும் சுற்றுலாவுக்கு ஏற்றதாக காணப்படுகிறது.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : காங்க்ரா பகுதியில் மார்ச் மாதத்தில் துவங்கி ஜூன் மாதம் வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 38° C வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 22° C வெப்பநிலையும் நிலவுகிறது. காங்க்ராவில் உள்ள சுற்றுலாஸ்தலங்களுக்கு விஜயம் செய்து சுற்றிப்பார்த்து ரசிக்கவும், மலையேற்றம் போன்ற சாகச இயற்கை சுற்றுலாக்களில் ஈடுபடவும் இந்த கோடைக்காலம் மிகவும் ஏற்றதாக உள்ளது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : காங்க்ரா பகுதியில் ஜுலை மாதத்தில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீள்கிறது. மழைக்காலத்தில் நல்ல மழைப்பொழிவை பெறுவதால் பசுமையான எழிற்சூழல் நிறைந்து காட்சியளிக்கும் இப்பருவம் சுற்றுலாவுக்கு உகந்ததாகும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரை) : காங்க்ரா பகுதியில் டிசம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலமானது பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 20° C வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 4° C வெப்பநிலையும் நிலவுகிறது. குளிர்காலம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் வெப்பநிலை இன்னும் கூட குறையக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.