முல்பெகே மடாலயம் கார்கிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள முல்பெகே கிராமத்தில், ஒரு பள்ளத்தாக்கின் இறுதியில் அமைந்துள்ளது. இம்மடம் சாலையிலிருந்து 200 மீ, உயரத்தில், ஒரு மலையின் மேல் உள்ளது.
இம்மடலயத்தில் ` எதிர்கால புத்தர்', ` சிரிக்கும் புத்தர்', அல்லது `மைத்ரேயா புத்தர்' என்கிற 9 மீ உயரமுள்ள சிலை உள்ளது. இந்த சிலை 8 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டது.
இச்சிலையை, ` லடாக்' பகுதியில் புத்த மதத்தை அறிமுகப்படுத்திய மிஷினரிகள் கொண்டு வந்தனர். இம்மடத்தில் பல பெளத்த பிக்குகளின் மிச்சங்கள் எஞ்சியுள்ளன. மடாலயத்தின் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள், இந்த மடங்கள் திபெத்தை சேர்ந்தவை அல்ல என்று நிரூபிக்கின்றன.