ஃபோகர், ஷார்கோலோ மடாலயத்தின் அருகே ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளது. இவ்விடம், ஃபோகர் ரிஷொங் (Phokar Rizong), மற்றும் உர்க்யங் ஷோங்க் (Urgyang Dzong), என அறியப்படுகிறது.
ஃபோகர் ரிஷொங், ஒரு வட்ட வடிவமான சமதளத்தில் உள்ளது. இது தியானம் செய்வதற்கு சிறந்த இடமாக விளங்குகிறது. இது குகைகள் மற்றும் சிகரங்களால் சூழப்பட்ட பகுதியில் உள்ளது. இப்பகுதியில் பிரபலமான புத்த குரு பத்மசம்பவர் மற்றும் பலரால் நிறுவப்பட்ட பல சமய மையங்கள் உள்ளன.
சுற்றுலா பயணிகள் இப்பகுதியை மலை உச்சிக்கு ட்ரெக்கிங் செல்வதன் மூலம் அடைய முடியும். இவ்விடத்தை அடைய இரண்டு வழிகள் உள்ளன. இதில் ஒன்று 1 கி.மீ. நீளமுள்ள குகைப்பாதை. மற்றொன்று 4 கிமீ நீளமுள்ள மலையை சுற்றி செல்லும் பாதை. குகை பாதை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மூடப்பட்டுவிடும்.