Share This Story
 
முகப்பு » கர்நாடகா » கர்கலா » கண்ணோட்டம்

கர்கலா - பாஹுபலியின் பூமி

வரலாற்று சிறப்பு வாய்ந்த கர்கலா நகரம் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமாகும்.

கர்கலா புகைப்படங்கள் - சதுர்முக பசாதி

கர்கலா நகரத்தின் வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்கும் போது, ஜைன மன்னர்களின் ஆட்சி காலமான 10-ஆம் நூற்றாண்டை பொற்காலம் என்றே சொல்லலாம். இந்தக் காலங்களில் தான் எண்ணற்ற ஜைன பசாதிகளும், கோயில்களும் ஜைன மன்னர்களால் கட்டப்பட்டது.

இந்தக் கோயில்களின் கட்டமைப்பு நேர்த்தியை ரசிப்பதற்காகவே இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதும். இதன் காரணமாகவே யுனெஸ்கோ அமைப்பு இதை உலக புராதான சின்னமாக அறிவித்துள்ளது.

கர்கலாவின் குன்றுகளில் கம்பீரமாக நிற்கும் 42 அடி பாஹுபலி சிலை அந்நகரின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதே போல் சிலையின் முன்பு காணப்படும் பிரம்மதேவா தூணும் மிகவும் விசேஷமானது.

அதுமட்டுமல்லாமல் கர்கலாவில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஜைன பசாதிகள் மொத்தம் 18 உள்ளன. மேலும், அனதஷயனா மற்றும் ஆதி சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களோடு இதர பல தொன்மையான ஆலயங்களும் கர்கலாவில் இருக்கின்றன. அதோடு கர்கலா நகரம் அதன் பாரம்பரிய புலிவேஷ நடனம் மற்றும் எருமை பந்தயத்துக்காகவும் பிரபலம்.

Click here to type in tamil

அருகில் பயணம்

கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி இங்குள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் இதன் உணவுச்சுவைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. உடுப்பி என்ற பெயரைக் கேட்டாலே நாவில் ஊறும் அளவுக்கு மத்வா இனத்தவரின் தென்னிந்திய பாணி உணவுத்தயாரிப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவர்கள் காலங்காலமாக தெய்வப்பிரசாதங்களை தயாரிக்கும் பணியில்
கோயில் நகரமான உடுப்பியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு அழகிய கடற்கரை நகரம் இந்த மால்பே ஆகும். இது கர்நாடகக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு இயற்கைத் துறைமுகம் மற்றும் முக்கியமான மீன்பிடி நகரம் ஆகும். உதயவரா ஆற்றின் முகத்துவார (உப்பங்கழி) பகுதியில்
அரபிக் கடலில் சூரியன் அஸ்த்தமனமாகும் கவின் கொஞ்சும் காட்சிக்கு சொந்தமான ஊர் அகும்பே. அகும்பே மால்நாடு பகுதியில் உள்ள மகாகவி குவெம்புவின் சொந்த ஊரான தீர்த்தஹள்ளி தாலுக்காவில் அமைந்துள்ளது. அழகும், அமைதியும் ஒருங்கே சூழப்பெற்ற அகும்பேதான் தென் இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும்
கர்நாடகத்தின் நுழைவாயில் என்று  அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது. மங்களாதேவி தெய்வத்தின் பெயரில் அமைந்திருக்கும் இந்த மங்களூர் நகரம் பல காலமாக ஓய்வில்லாத ஒரு