கர்கலா வரும் வழியில் அமைந்திருக்கும் ஜைன காசி என்று அழைக்கப்படும் மூடபித்ரி என்ற நகரத்துக்கு பயணிகள் நேரமிருந்தால் சென்று பார்க்கலாம். இங்கு மிகவும் புகழ் வாய்ந்த சந்திரநாத சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் உள்ள 1000 தூண்களும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அழகு தனிச் சிறப்பு வாய்ந்தது. இதை தவிர மூடபித்ரியில் குரு பசாதி, அம்மன்வரா பசாதி, திருபுவன திலக சூடாமணி பசாதி, லெப்பட பசாதி போன்ற பசாதிகளும் இருக்கின்றன.
அதே போல் கௌரி கோயில், கந்தவரா கோயில் போன்ற இந்து கோயில்களும் உள்ளன. முக்கியமாக, மூடபித்ரியில் அமைந்திருக்கும் கொனஜி கல்லு என்ற ஒரே கல்லாலான சாரு கீர்த்தி சுவாமியின் மத பீடம் மிகப் பிரபலம்.