கார்வாருக்கு விஜயம் செய்யும்போது பயணிகள் கார்வாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள குட்டலி சிகரத்தை சென்று பார்க்குமாறு பரிந்துரைக்க்ப்படுகிறார்கள். இந்த மலைச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 1800 அடி உயரத்தில் அமைந்துள்ளது மட்டுமன்றி .
இது மேற்கில் பெல்கேரி ஆற்றினாலும் கிழக்கில் காளி ஆற்றினாலும் சூழப்பட்டுள்ளது. பயணிகள் ஹைதர்காட் மலைத்தொடரின் இந்த உயரமான சிகரத்தை வருடத்தின் எப்பருவத்திலும் சென்று பார்க்கலாம்.
பயணிகள் 500 மீட்டர் தூரத்துக்கு காட்டு வழியாக மலையேற்றம் செய்து இந்த சிகரத்தை அடைய வேண்டியுள்ளதால் ஏறும் வழியில் மலைமீதிருந்து கீழேயுள்ள கடற்கரை மற்றும் நகரம் போன்றவற்றை மேலிருந்து தரிசிக்கும் அற்புத அனுபவத்தை பெறலாம்.
வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி இந்த சிகரம் சுதந்திரத்துக்கு முன்னர் ஆங்கிலேயருக்கு கோடை மலைவாசஸ்தலமாக பயன்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.