கார்வார் நகரத்துக்கு அருகில் உள்ள 300 வருட பழமை வாய்ந்த கோயில் இந்த வெங்கடரமணா கோயிலாகும். இங்குள்ள பழமையான களிமண் இயற்கை வண்ண ஓவியங்கள் சுற்றுலா பயணிகளிடையே புகழ் பெற்ற ஒரு சிறப்பம்சமாகும்.
கார்வார் கடற்கரைக்கு செல்லும் எல்லா பயணிகளும் இந்த கோயிலையும் தவறாமல் பார்ப்பது நல்லது. இந்த கோயிலுக்கு செல்வதற்கு கார்வார் நகரத்திலிருந்து பஸ் ஆட்டோ போன்ற வசதிகள் உள்ளன.