Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்வார் » வானிலை

கார்வார் வானிலை

இனிமையான சீதொஷ்ணம் மற்றும் பருவநிலையுடன் காணப்படும் குளிர்காலமே கார்வார் நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்ற பருவ காலமாகும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜுன் வரை) : கோடைக்காலத்தில் கார்வார் பகுதியில் வெப்பநிலை 380C வரை உள்ளது. குறைந்தபட்சமாக 300C ஆக இருக்கும். உஷ்ணமும் ஈரப்பதமும் கடுமையாக இருக்கும் கோடைக்காலத்தை பயணிகள் தவிர்ப்பது நல்லது. சுற்றிப்பார்ப்பதும் இயற்கை அழகை ரசிப்பதும் இக்காலத்தில் மிக அசௌகரியமாக இருக்கும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் அக்டோபர் வரை) : அரபிக்கடலை ஒட்டியே இருப்பதால் கார்வார் நகரம் கடுமையான மழையை மழைக்காலத்தில் பெறுகிறது. இக்காலத்தில் கார்வார் நகரம் பசுமையாக எழிலுடன் காட்சியளிக்கிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் மார்ச் வரை) : கார்வார் நகரம் குளிர்காலத்தில் மிதமான குளிருடன் காணப்படுகிறது. இக்காலத்தில் இங்கு வெப்பநிலை அதிகபட்சம் 180C ஆகவும் குறைந்தபட்சமாக 260C ஆகவும் உள்ளது.  குளிர்காலத்தில் கார்வாருக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.