Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கம்மம் » வானிலை

கம்மம் வானிலை

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான பருவமே கம்மம் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இம்மாதங்களில் மிதமான வெப்பம் நிலவுவதால் சுற்றுலா மற்றும் பயணத்துக்கு மிகவும் ஏற்றதாக காணப்படுகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் குளிர் சற்று கூடுதலாகவும் இருப்பதால் மெலிய குளிர் அங்கிகள் மற்றும் உடுப்புகளோடு பயணிப்பது நல்லது.

கோடைகாலம்

கம்மம் நகரத்தில் மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் ஜூன் ஜுன் மாதம் வரை நீள்கிறது. மே மற்றும் ஜூன் மாதத்தில் மிக அதிகமாக 42° C வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. நீர் வறட்சி மற்றும் வெப்பத்தாக்குதலால் பயணிகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் கோடைக்காலத்தில் கம்மம் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

மழைக்காலம்

கம்மம் நகரத்தில் ஜுன் மாதத்தில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீள்கிறது. வெப்பமண்ட பருவநிலையை கொண்டுள்ளதால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கூட மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளது. மிதமானது முதல் கடுமையானது வரை மழைப்பொழிவு நிலவும் மழைக்காலத்தில் இப்பகுதியின் வெப்பநிலை 35° C வரை குறைந்து காணப்படுகிறது.

குளிர்காலம்

கம்மம் பகுதி குளிர்காலத்தில் இனிமையான இதமான சூழலை கொண்டுள்ளது. வட இந்தியாவைப்போல் இங்கு குளிர்காலத்தில் நடுங்க வைக்கும் குளிர் நிலவுவதில்லை. நவம்பர் மாத இறுதியில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாத இறுதி வரை நீடிக்கிறது. ஜனவரி மாதத்தில் குளிர் சற்று கூடுதலாகவும் இருக்கும். குளிர்காலத்தில் சராசரியாக 25° C வெப்பநிலை கம்மம் நகரத்தில் நிலவுகிறது.