கண்டாலா மலைவாசஸ்தலத்தில் பிரபலமான சுற்றுலா அம்சம் இந்த கார்லா மற்றும் பாஜா குகைகள் ஆகும். இது இங்கிருந்து 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த புராதனச்சின்னங்கள் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று சொல்லப்படுகிறது.
இவை ஹீனயானம் எனப்படும் பௌத்த மரபுப்படி அமைக்கப்பட்டுள்ள புத்த குகைக்கோயில்களாகும். இந்தியாவின் புராதன குகைக்கோயில் சிற்பக்கலைக்கு முக்கியமான உதாரணமாக இவை கருதப்படுகின்றன.